रणन्मञ्जीराभ्यां ललितगमनाभ्यां सुकृतिनां
मनोवास्तव्याभ्यां मथिततिमिराभ्यां नखरुचा ।
निधेयाभ्यां पत्या निजशिरसि कामाक्षि सततं
नमस्ते पादाभ्यां नलिनमृदुलाभ्यां गिरिसुते ॥ ९६॥
ரணன் மஞ்ஜீராப்⁴யாம் லலித க³மனாப்⁴யாம் ஸுக்ருʼதி நாம்
மனோ வாஸ்தவ்யாப்⁴யாம் மதி²த திமிராப்⁴யாம் நக²ருசா ।
நிதே⁴யாப்⁴யாம் பத்யா நிஜ ஶிரஸி காமாக்ஷி ஸததம்
நமஸ்தே
பாதா³ப்⁴யாம் நலின ம்ருʼது³லாப்⁴யாம் கி³ரிஸுதே
॥ 96॥
மலைமகளே! காமாக்ஷி! ஒலிக்கும் சிலம்பணிந்தவையும், அழகு நடையுடையவையும், புண்ணியர்களின் உள்ளம் குடிகொண்டதும்,
நகவொளியால் மனவிருள் போக்குவதும், பதியாம் சிவனால் தலையில் வைத்துத் தாங்கத் தக்கவையும்,
தாமரைப்போல் மென்மைமையானவையுமாம் உன்னுடைய பாதங்களுக்கு எப்போதுமென் வணக்கங்கள்!
ஒலிக்கும்தண் டைபூண்டே, ஒட்ப நடைகொண்டே, உன்னதருள்
நிலைத்து, நகத்தின் நிகமத்தால் உள்ளிருள் நீக்குவதும்,
தலையிலே தன்பதி தாங்குமாம் தாமரைத் தண்மையுடை
மலைமகள் காமாட்சி மாபாத மென்றும் வணங்குவனே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam