டிசம்பர் 22, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 95

धुनानं कामाक्षि स्मरणलवमात्रेण जडिम-
ज्वरप्रौढिं गूढस्थिति निगमनैकुञ्जकुहरे
अलभ्यं सर्वेषां कतिचन लभन्ते सुकृतिनः
चिरादन्विष्यन्तस्तव चरणसिद्धौषधमिदम् ९५॥

துனானம் காமாக்ஷி! ஸ்மரண லவ மாத்ரேண ஜடி³ம-
ஜ்வர ப்ரௌடிம் கூ³ஸ்தி²தி நிக³ம நைகுஞ்ஜ குஹரே
அலப்யம் ஸர்வேஷாம் கதிசன லபந்தே ஸுக்ருʼதின:
சிராத³ன்விஷ்யந்தஸ் தவ சரண ஸித்³தௌஷதமித³ம் 95

காமாக்ஷி! சிறிது நினைப்பதாலேயே அறியாமையாம் கொடிய காய்ச்சலைப் போக்குவதும், வேதங்களென்னும் புதர்களின் உட்புறத்தில் இரகசியமாக வைக்கப்பட்டதும்,  எல்லோரும் கிடைதற்கரியதுமான உன் பாதங்களென்கிற இந்த சிறந்த மருந்தை புண்ணியராம் சிலரே பலகாலமாகத் தேடி அடைகின்றனர்.

சிறிதே நினைக்கினும் தேசின்மை யாம்கொடும் சீக்கைநீக்கும்,
மறையாம் புதரில் மறைத்தே ஒளிவாக வைத்தவொன்றும்
பிறர்க்கெளி தற்ற பெருமருந் தாமுன் பெருங்கழல்கள்
அறவோர் சிலரே அடைந்திட காமாட்சீ ஆவதாமே!

தேசின்மை-அறிவின்மை;

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...