டிசம்பர் 15, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 87

जडानामप्यम्ब स्मरणसमये तवच्चरणयोः
भ्रमन्मन्थक्ष्माभृद्धुमुघुमितसिन्धुप्रतिभटाः
प्रसन्नाः कामाक्षि प्रसभमधरस्पन्दनकला
भवन्ति स्वच्छन्दं प्रकृतिपरिपक्वा भणितयः ८७॥

ஜடா³நாமப்யம்ப³ ஸ்மரண ஸமயே த்வச் சரணயோ:
ப்ரமன்மந்த² க்ஷ்மா ப்ருʼத்³து முகுமித ஸிந்து ப்ரதிபடா:
ப்ரஸன்னா: காமாக்ஷி! ப்ரஸபமதரஸ்பந்த³ன கலா
வந்தி ஸ்வச்ச²ந்த³ம் ப்ரக்ருʼதிபரிபக்வா பணிதய: 87

தாயே காமாக்ஷீ! அறிவீனர்களுக்கும் கூட, உன் திருவடிகளை நினைந்ததும், சுழலும் மந்தர மலையாம் மத்தால் கடையப்பெற்று குமுகுமுவெனும் கடலொலிக்கு மாறாக, அழகானவையும், இயல்பாகவே சிறந்தவைகளும், உதடுகள் அசையும்போதே அழகானவைகளுமான ஒலிகள் தாமாகவே வெளியாகின்றன.

அம்மேகா மாட்சீ! அறிவீனர்க் கும்நின் அடிகழல்கள்
தம்மனம் வைத்த தருணம் மலைமந் தரம்கடைந்த
அம்பர சத்தத்தின், ஆர்மிக்கு, தாமே அருமையாயும்
தம்மத ரம்மசைந் தாலார் ஒலிகளும் தாமுறுமே!


அம்பரம்-கடல்; ஆர் மிக்கு- அழகு மிக்கு; அருமை-சிறந்த- அதரம்-உதடு;

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...