டிசம்பர் 15, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 86

गृहीत्वा याथार्थ्यं निगमवचसां देशिककृपा-
कटाक्षर्कज्योतिश्शमितममताबन्धतमसः
यतन्ते कामाक्षि प्रतिदिवसमन्तर्द्रढयितुं
त्वदीयं पादाब्जं सुकृतपरिपाकेन सुजनाः ८६॥

க்³ருʼஹீத்வா யாதா²ர்த்²யம் நிக³ம வசஸாம் தே³ிக க்ருʼபா-
கடாக்ஷர்க ஜ்யோதிமித மமதா ப³ந்த தமஸ:
யதந்தே காமாக்ஷி ப்ரதி தி³வஸமந்தர் த்³ரடயிதும்
த்வதீ³யம் பாதா³ப்³ஜம் ஸுக்ருʼத பரிபாகேன ஸுஜனா: 86

காமாக்ஷியே! குருவினுடைய அருள் கடைக்கண்ணாம் ஆதவனொளியால் அகந்தை என்னும் அல் நீங்கியவர்களான நல்லோர், வேதங்கூறும் நல்ல வாக்கின் உண்மைப் பொருளுணர்ந்து, தங்கள் நல்வினைப் பயனாய் உன் சரணகமலங்களை தங்கள் இதயங்களில் உறுதியாக நிலைபெறுத்த ஒவ்வொரு நாளும் முயல்கிறார்கள்

அருளும் குருகடை அட்ச அருணனால் அற்றகந்தை
இருளே, உரவோர், இதஞ்சொல் மறையில் இருக்குமுண்மைப்
பொருள்தேர்ந்து நல்லூழ் புரிபய னாயம் புயசரண்கள்
இருத்த இதயத்தே என்நாளும் காமாட்சி ஏங்குவரே!


கடை அட்சம்-கடைக்கண்; அருணன் - ஆதவன்; உரவோர்- நல்லோர்; நல்லூழ்-நல்வினை; அம்புயம்-தாமரை;

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...