कथं वाचालोऽपि प्रकटमणिमञ्जीरनिनदैः
सदैवानन्दार्द्रान्विरचयति वाचंयमजनान् ।
प्रकृत्या ते शोणच्छविरपि च कामाक्षि चरणो
मनीषानैर्मल्यं कथमिव नृणां मांसलयते ॥ ७६॥
கத²ம் வாசாலோऽபி ப்ரகட மணி மஞ்ஜீர நினதை:³
ஸதை³வானந்தா³ர்த்³ரான் விரசயதி வாசம்யம ஜனான் ।
ப்ரக்ருʼத்யா தே ஶோணச்ச²விரபி ச காமாக்ஷி! சரணோ
மனீஷா
நைர்மல்யம் கத²மிவ ந்ருணாம்
மாம்ஸலயதே ॥ 76॥
காமாக்ஷியே! உன்பாதம், அழகு மணிச் சிலம்புகளின் ஒலிகளால் மிகுந்த பேச்சுள்ளதாயின்,
வாக்கை அடக்கும் முனிவர்களை எப்படி ஆனந்தத்தில் திளைத்தவர்களாகச் செய்கிறது? இயல்பில்
செவ்வொளி கொண்டிருந்தாலும், எவ்வாறு மனிதருக்கு அறிவுத் தெளிவாம் நிறமின்மையைப் பெருக்குகிறது?
சத்தம் மிகுந்து சவிமணிக் காற்றண்டை சாற்றிடினும்
முத்தர்
மவுன முனிவோர்க்கு மோதத்தை மூட்டுமுன்றன்
பத்திப்
பதங்கள்தம் பாங்கினில் செவ்வொளி பற்றிடினும்
பத்தர்தம்
ஞானம் பளிங்கென்செய் காமாட்சீ! பாங்குடைத்தே?
சத்தம்-ஒலி; சவி-அழகு; மணி-இரத்தினம்; காற்றண்டை - காற்சிலம்பு; சாற்றுதல்-பேசுதல்;
முத்தர்- ஞானியர்; மோதம்-மகிழ்ச்சி; பத்தி-பக்தி; பாங்கு-இயல்பு; செவ்வொளி-சிவந்த ஒளி;
பளிங்கு-வெண்மைநிறம்; பாங்கு-தன்மை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam