டிசம்பர் 03, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 75

स्वभावादन्योन्यं किसलयमपीदं तव पदं
म्रदिम्ना शोणिम्ना भगवति दधाते सदृशताम्
वने पूर्वस्येच्छा सततमवने किं तु जगतां
परस्येत्थं भेदः स्फुरति हृदि कामाक्षि सुधियाम् ७५॥

ஸ்வபாவாத³ன்யோன்யம் கிஸலயமபீத³ம் தவ பத³ம்
ம்ரதி³ம்னா ோணிம்னா ப³வதி த³தாதே ஸத்³ருʼதாம்
வனே பூர்வஸ்யேச்சா² ஸததமவனே கிம் து ஜக³தாம்
பரஸ்யேத்த²ம் பேத:³ ஸ்பு²ரதி ஹ்ருʼதி³ காமாக்ஷி ஸுதியாம் 75

அனைத்து குணங்களும் அமைந்த காமாக்ஷீ! இளந்துளிரும், உன்பாதமும், இயற்கையிலேயே மென்மையாலும், செந்நிறத்தாலும், ஒன்றுக்கொன்று ஒத்த தன்மை உடையதாயினும், முன்னதற்கு (தளிருக்கு) வனத்திலே விருப்பமென்றும், பின்னதற்கு (உன்பாதத்திற்கோ) எப்போதும், உலகோரைக் காப்பதிலேயே விருப்பமென்றும் என்னும் வேற்றுமை அறிஞர்களின் உள்ளத்தில் தோன்றுகிறது. மூகர், இந்த சுலோகத்தில் வனம் (காடு), அவனம் (காப்பதில்) என்று செய்திருக்கும் சொல்விளையாடல் அலாதியானது.

அனைத்து குணமும் அமைந்தகா மாட்சீ அயானமாக
உனதுபா தங்களும்  உல்ல ரியும்தம்மில் ஒத்தவையாம்,
தனதுசெம் மைமென்மைத் தன்மையால்; ஆயின் தளிர்விரும்பும்
வனம்கழல் பூகாக்க வாமென் றறிஞர் மனங்களிலே!


அயானம்- இயற்கையில்; உல்லரி-தளிர்; பூ-உலகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...