டிசம்பர் 31, 2016

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 1

[மந்தஸ்மித சதகம் பொதுவாக இறுதிச் சதகமாகக் கொள்ளப்பட்டாலும், கணேசய்யர் பாஷ்யமும், அதையொட்டிய இராதகிருஷ்ண சாஸ்திரிகளின் உரை நூலும், செய்துள்ள வரிசைக் கிரமத்திலேயே அடியேனும் இத் தமிழ் கவிவுரையைச் செய்துள்ளேன்]

मन्दस्मितशतकम्

बध्नीमो वयमञ्जलिं प्रतिदिनं बन्धच्छिदे देहिनां
कन्दर्पागमतन्त्रमूलगुरवे कल्याणकेलीभुवे
कामाक्ष्या घनसारपुञ्जरजसे कामद्रुहश्चक्षुषां
मन्दारस्तबकप्रभामदमुषे मन्दस्मितज्योतिषे १॥

மந்த³ஸ்மிதஶதகம்

³த்னீமோ வயமஞ்ஜலிம் ப்ரதிதி³னம் ³ந்தச்சி²தே³ தே³ஹிநாம்
கந்த³ர்பாக³ம தந்த்ரமூல கு³ரவே கல்யாண கேலீபுவே
காமாக்ஷ்யா னஸார புஞ்ஜரஜஸே காம த்³ருஹஶ்சக்ஷுஷாம்
மந்தா³ர ஸ்தப³க ப்ரபாமத³ முஷே மந்த³ஸ்மித ஜ்யோதிஷே 1

உயிர்க்கெலாம் பவத்தொடர்பறுப்பதும், மன்மத சாத்திரத்தின் முதற்குருவும், மங்கள விளையாடல்களின் இருப்பிடமும், காமவைரியாம் சிவனுக்கு பச்சைக் கற்பூரத்தூள்போல் குளிர்ச்சியைத் தருவதும், மந்தாரப் பூங்கொத்தின் ஒளியினுடைய அகந்தையை அடக்குவதுமான காமாக்ஷியின் மென்சிரிப்பின் ஒளிக்கு தினமும் நாம் இருகைகளைக் கூப்பிடுவோம்.

பாரி லுயிர்க்குப் பவபந் தமழிக்கும் பஞ்சபாண
ஆரணத் தின்முதல் அத்தனும், மங்கல ஆட்டுறைவும்
மாரயா ரிக்கு மழைப்பூரத் தூளாம்கா மாட்சியின்மந்
தாரம்தாழ் செய்மந் தநகைக்கு நம்மஞ் சலிதினமே!


பவபந்தம்-பவத்தொடக்கை; பஞ்சபாண ஆரணம்-காம சாத்திரம்; அத்தன்-குரு; ஆட்டுறைவு-விளையாடல்களின் இருப்பிடம்; மார யாரி- மன்மத வைரி (சிவன்);  மழை-குளிர்ச்சி; பூரத்தூள்-பச்சைக் கற்பூரத்தூள்; தாழ்செய்-அகந்தையடக்கும்; மந்தநகை-மென்னகை; அஞ்சலி-கைகூப்பித் தொழல்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...