ஜனவரி 01, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 2

सध्रीचे नवमल्लिकासुमनसां नासाग्रमुक्तामणे-
आचार्याय मृणालकाण्डमहसां नैसर्गिकाय द्विषे
स्वर्धुन्या सह युध्वेन हिमरुचेरर्धासनाध्यासिने
कामाक्ष्याः स्मितमञ्जरीधवलिमाद्वैताय तस्मै नमः २॥

ஸத்ரீசே நவமல்லிகா ஸுமனஸாம் நாஸாக்³ர முக்தாமணே:
ஆசார்யாய ம்ருʼணால காண்ட³ மஹஸாம் நைஸர்கி³காய த்³விஷே
ஸ்வர்துன்யா ஸஹ யுத்வேன ஹிமருசேரர்தாஸனாத்யாஸினே
காமாக்ஷ்யா: ஸ்மிதமஞ்ஜரீ தவலிமாத்³வைதாய தஸ்மை நம: 2

நவமல்லிப் பூவிற்கு ஒப்பானதும், நாசியின் நுனியில் தொங்கும் புல்லாக்கணியின் முத்துக்கு ஆசிரியனும், தாமரைத்தண்டின் உள்ளொளிக்கு இயற்கையில் எதிரியும், ஆகாயக்கங்கையோடு சண்டையிடுவதும், நிலவின் பாதியில் அமர்வதுமான காமாட்சியின் புன்சிரிப்பின் நிகரற்ற வெண்மைக்கு என் வணக்கங்கள்!

நவமல்லிக் கொப்பாயும் நாசி யணிமுத்தின் நற்குருவும்
கவின்கயத் தண்டினுள் காந்திக் கியற்கையில் காணலனும்
துவந்துவம் கங்கைத் துனியொடு செய்வதும் சோமனமர்
உவமையில் மென்னகை ஒண்மைக்கென், காமாட்சீ, உட்சரணே!


நாசியணி-புல்லாக்கு; கவின்-அழகு; கயம்-தாமரை; காந்தி-ஒளி; காணலன்-எதிரி; துவந்துவம்-சண்டை; துனி-நதி; சோமன்-சந்திரன்; உவமை-ஒப்பென்று சொல்லவொன்று; மென்னகை-சிரிப்பு; ஒண்மை-ஒளி/வெண்மை;

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...