इदं यः कामाक्ष्याश्चरण नलिन स्तोत्र शतकं
जपेन्नित्यं भक्त्या निखिल जगदाह्लाद जनकम् ।
स विश्वेषां वन्द्यः सकल कवि लोकैक तिलकः
चिरं भुक्त्वा भोगान्परिणमति चिद्रूप कलया ॥ १०३॥
पादारविन्दशतकं सम्पूर्णम् ॥
இத³ம் ய: காமாக்ஷ்யா: சரண நலின ஸ்தோத்ர ஶதகம்
ஜபேன்னித்யம்
ப⁴க்த்யா
நிகி²ல ஜக³தா³ஹ்லாத³ ஜனகம் ।
ஸ விஶ்வேஷாம் வந்த்³ய: ஸகல
கவி லோகைக திலக:
சிரம்
பு⁴க்த்வா
போ⁴கா³ன் பரிணமதி சித்³ ரூப கலயா
॥ 103॥
பாதா³ரவிந்த³ஶதகம் ஸம்பூர்ணம் ॥
அனைத்து உலகங்களுக்கும் ஆனந்தத்தை தரும் காமாக்ஷியின் திருவடித் தாமரைகளைப்
பற்றிய, இந்த நூறு துதிகளை எவனொருவன் பக்தியோடு எப்போதும் படிக்கிறானோ, அவன் உலகே வந்திக்கப்படுவனாகவும்,
அனைத்து கவியுலகிற்கும் திலகமாகவுமாகி, அனைத்துச் சுகங்களையும், வெகுகாலம் பெற்று, சித்துருவாகவே ஆகிறான்.
பாதாரவிந்த
சதகப் பாராயணப் பயன்:
அனைத்து
லகினுக்கும் ஆனந்த, காமாட்சீ அன்னைசரண்
தனைப்பாடும்
நூறாம் சரணங்கள், பக்தியில் தாம்படிப்போர்க்
கனைத்துல
கும்வந்திக் கக்கவி கட்சுடி கையுமாகி
அனைத்து
சுகமும் அடைந்துசித் தாகவே ஆவரன்றே!
சுடிகை-திலகம்
பாதரவிந்த
சதகம் (நூறு) இத்துடன் முடிவுற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam