நவம்பர் 21, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 63

प्रतीमः कामाक्षि स्फुरिततरुणादित्यकिरण-
श्रियो मूलद्रव्यं तव चरणमद्रीन्द्रतनये
सुरेन्द्राशामापूरयति यदसौ ध्वान्तमखिलं
धुनीते दिग्भागानपि महसा पाटलयते ६३॥

ப்ரதீம: காமாக்ஷி ஸ்பு²ரித தருணாதி³த்ய கிரண-
்ரியோ மூல த்³ரவ்யம் தவ சரணமத்³ரீந்த்³ர தனயே
ஸுரேந்த்³ராாமாபூரயதி யத³ஸௌ த்வாந்தமகி²லம்
துனீதே தி³க்³பாகா³னபி ச மஹஸா பாடலயதே 63

காமாக்ஷீ! உதிக்கும் இளஞ்சூரியக் கதிர்களின் காந்திக்கு உன்பாதங்களை மூலகாரணமாக என்றெண்ணுகிறோம். ஏனெனில் இது தேவேந்திரனின் ஆசையை நீக்குவிதமாய் அனத்து அல்லகற்றும்; மேலும் தன்னொளியால் திக்கெலாம் செந்நிறமாக்குகிறதே.

உதிக்கும் இளயினன் ஒண்கதிர் காந்திக்குன் ஒண்ணடியே
முதலேதாய் நேடுவோம், மூவார்தம் மன்றிசை மூடிருளை
கதித்தது நீக்கலால்! காமாட்சீ! மேலுமக் காந்தியடி
பதிக்கும் திசையெலாம் பாடல வண்ணம் பளிச்சிடுதே!


இளயினன் -இளஞ்சூரியன்; முதல்-மூலம்; ஏது-காரணம்; நேடுவோம்- எண்ணுதல்; மூவார் தம்மன் திசை - தேவர்களின் மன்னன், இந்திரனின் திசை (கீழக்கு); கதித்து-விரைந்து; பதிக்கும்-வைக்கும்; பாடல வண்ணம்- சிவப்பு நிறம்;

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...