நவம்பர் 20, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 62

जयत्यम्ब श्रीमन्नखकिरणचीनांशुकमयं
वितानं बिभ्राणे सुरमुकुटसंघट्टमसृणे
निजारुण्यक्षौमास्तरणवति कामाक्षि सुलभा
बुधैः संविन्नारी तव चरणमाणिक्यभवने ६२॥

ஜயத்யம்ப³! ஸ்ரீமன் நக² கிரண சீநாம்ுக மயம்
விதானம் பி³ப்ராணே ஸுர முகுடஸம்கட்டமஸ்ருʼணே
நிஜாருண்ய க்ஷௌமாஸ்தரண வதி காமாக்ஷி ஸுலபா
பு³தை: ஸம்வின்னாரீ தவ சரணமாணிக்ய பவனே 62

தாயே! காமாக்ஷீ! அழகிய நகக்கிரணங்களால் ஆகிய மென் பட்டுக் கூரை வேய்ந்ததும், தேவர்களின் மணிமுடிகள் உரசலால் வழவழப்புள்ளதும், செந்நிறமாம் பட்டு விரிப்புடையதுமாம் உன் திருவடிகளாம் இரத்தின மாளிகையில் பேருணர்வெனும் பெண் ஞானிகளால் எளிதில் பெறத்தக்கவளாம் விளங்குகிறாள்.

அழகாம் நகங்களால் ஆய்பட்டுக் கூரை அமைந்துவழ
வழப்பாய் அமரர் மணிமுடி தீண்டவு மாகிசெம்மைத்
தழல்நிறப் பட்டுத் தரைவிரி கொள்மணித் தாள்நகரில்
விழிநங்கை காமாட்சீ வித்தர்க் கெளிதாய் விளங்குவளே!


ஆய்-மென்; தழல்நிறம்-செந்நிறம்; தரைவிரி-தரை விரிப்பு; மணி-இரத்தினம்; தாள்-பாதம்; நகர்-மாளிகை; விழி-ஞானம்; வித்தர்-ஞானிகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...