நவம்பர் 18, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 60

नयन्तीं दासत्वं नलिनभवमुख्यानसुलभ-
प्रदानाद्दीनानाममरतरुदौर्भाग्यजननीम्
जगज्जन्मक्षेमक्षयविधिषु कामाक्षि पदयो:
धुरीणामीष्टे कस्तव भणितुमाहोपुरुषिकाम् ६०॥

நயந்தீம் தா³ஸத்வம் நலினபவ முக்²யானஸுலப-
ப்ரதா³னாத்³தீ³னாநாமமர தரு தௌ³ர்பாக்³ய ஜனனீம்
ஜக³ஜ் ஜன்ம க்ஷேம க்ஷய விதிஷு காமாக்ஷி பத³யோ:
துரீணாமீஷ்டே கஸ் தவ பணிதுமாஹோ புருஷிகாம் 60

காமாக்ஷீயே! பிரமனுள்ளிட்ட தேவர்களை தனக்கு அடியார்களாகக் கொள்வதும், எளியவர்களுக்கு அரிதானவற்றையும் கிடைக்கச் செய்வதால் கற்பகத்தருவின் பெருமையைக் குறைப்பதும், உலகின் படைப்பு, அழிப்பு என்னும் செயல்களில் முன்னிற்பதுமான உன்பாதங்களின் பெருமையை எடுத்துரைக்க வல்லவர் யார்?

அயனாதி தேவர் அடியராய் பெற்றே அமைந்தனவாம்,
தயயோ டெளியோர் தமக்க கரியதும் தந்தருளி,
உயர்கற் பகத்தின் ஒளிதாழ்த்தும், பூவிலே ஒட்டியழி
செயல்செய்யும், காமாட்சீ சேவடி செப்பம்யார் செப்புவரே?


அயன் -பிரமன்; ஒளி-பெருமை; பூ-உலகு; ஒட்டுதல்-படைத்தல்; அழி-சம்ஹரித்தல்; செப்பம்-பெருமை;

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...