அக்டோபர் 20, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 31

सुराणामानन्दप्रबलनतया मण्डनतया
नखेन्दुज्योत्स्नाभिर्विसृमरतमःखण्डनतया
पयोजश्रीद्वेषव्रतरततया त्वच्चरणयोः
विलासः कामाक्षि प्रकटयति नैशाकरदशाम् ३१॥

ஸுராணாமானந்த³ப்ரப³லனதயா மண்ட³னதயா
நகே²ந்து³ஜ்யோத்ஸ்னாபிர்விஸ்ருʼமரதம:க²ண்ட³னதயா
பயோஜ்ரீத்³வேஷவ்ரதரததயா த்வச்சரணயோ:
விலாஸ: காமாக்ஷி ப்ரகடயதி நைாகரத³ாம் 31

காமாக்ஷீ! உன் பாதங்களின் ஒளிரும் எழிலானது, தேவர்களுக்கு மகிழ்ச்சியைப் பெருக்கிடும் தலையணியாக இருப்பதாலும், நகங்களின் ஒளியால் (அஞ்ஞான) இருளை நீக்குவதாலும், தாமரையின் அழகைப் பழிக்கும் விரதம் பூண்டு அதில் மூழ்கியதாலும், தாமே நிலவாக இருப்பதை பலரறியச் உணர்த்துகிறது.

இவ்வாறு நிலவின் குணங்களையெல்லாம் அம்மையின் பாதங்களுக்கும் இருப்பதைத் தெறிவிக்கிறார் கவி. இந்துவே தேவருலகு பூணணி போன்றவன்! சந்திரன் இருளை நீக்குவதுபோல அம்மை நகவொளி அஞ்ஞானத்தை அகற்றுகிறது; இந்துவைக்கண்டால் தாமரை வாடும், அம்மையின் பாத அழகைக்கண்டும் தமக்கில்லையே என்று தாமரைகள் வாடும என்று கவி கற்பனை செய்கிறார்.

காமாட்சீ உன்பாதங் கள்காட் டுமெழில் கடவுளர்தம்
ஆமோதம் கூட்டும் அழகு தலையணி ஆனதினால்,
மாமயல் அல்லை மறைநக காந்தி வதிந்ததினால்,
தாமரை தாழ்த்தும் தவத்தினா லானதே தண்ணவனே!

ஆமோதம்-மகிழ்ச்சி; மாமயல்-பெரும் அஞ்ஞானம்; அல்-இருள்; வதிதல்-தங்குதல்; தவம்-விரதம்; தண்ணவன்-சந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...