சிராத்³ த்³ருʼஶ்யா ஹம்ஸை: கத²மபி ஸதா³ ஹம்ஸ ஸுலப⁴ம்
நிரஸ்யந்தீ
ஜாட்³யம் நியதஜட³மத்⁴யைக ஶரணம் ।
அதோ³ஷ வ்யாஸங்கா³ ஸததமபி
தோ³ஷாப்திமலினம்
பயோஜம்
காமாக்ஷ்யா: பரிஹஸதி பாதா³ப்³ஜயுக³லீ ॥ 30॥
அங்கிச (ஹம்ஸ) யோகியருமே மிக்க சிரமப்பட்டு, வெகு
காலத்துக்குப்பின்பே காணத்தக்கவையும், ஜடத்தன்மையாகிய ஞானக்கேடாம் இருளைப் போக்குமியல்பு
உள்ளவையும், எவ்வித குறையோடு தொடர்பில்லாததுமான, காமாக்ஷியின் பாதங்களாம் இரண்டு தாமரைப்
பூக்கள், அம்சங்களுக்கு எளியதாம்; எப்போதம்
(ஜடம்)சலத்தோடு இருப்பதும், மாலைநேரத்தே வாடிப்போவதுமான தாமரையை ஏளனம் செய்கிறது. இச்சுலோகத்தில்
ஹம்ஸம் (யோகியர், அன்னம்), ஜடம் (அஞ்ஞானம், குளிர்ந்த நீர்), தோஷம் (குறை, மாலை) என்னும்
சொற்கள் சிலேடையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது சிறப்பாகும்.
அங்கிச ரும்தாம் அவத்தை யடைந்தபின் ஆங்குகாணும்,
மங்கும் ஜடவிருள் மாற்றிடும், தோசம் வயங்கொளாதாம்,
பங்கய, காமாட்சிப் பாதங்கள் அன்னங்கள் பங்கேகும்;நீர்
தங்கும்; கமலத் ததன்தோசத் தையிகழ் தான்செயுமே!
அங்கிசர்-பரமஹம்ஸர் யோகியர்; அவத்தை-சிரமம்; ஜடம்-ஞானக்கேடு;
தோசம்-குறை, மாலை நேரம்; இகழ்-ஏளனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam