पवित्राभ्यामम्ब प्रकृतिमृदुलाभ्यां तव शिवे
पदाभ्यां कामाक्षि प्रसभमभिभूतैः सचकितैः ।
प्रवालैरम्भोजैरपि च वनवासव्रतदशाः
सदैवारभ्यन्ते परिचरितनानाद्विजगणैः ॥ २९॥
பவித்ராப்⁴யாமம்ப³ ப்ரக்ருதி
ம்ருது³லாப்⁴யாம் தவ ஶிவே
பதா³ப்⁴யாம் காமாக்ஷி
ப்ரஸப⁴மபி⁴
பூ⁴தை: ஸசகிதை: ।
ப்ரவாலைரம்போ⁴ஜைரபி ச வனவாஸ வ்ரத த³ஶா:
ஸதை³வா ரப்⁴யந்தே பரிசரித நாநா த்³விஜக³ணை: ॥ 29॥
தாயே! சிவே! காமாக்ஷீ! நீரின் நடுவில் தாமரைகள் அழகாய் மலர்ந்திருக்க,
அவற்றின்மேல் அன்னங்கள் வீற்றிருக்குமாம். தூய்மையும், இயல்பில் மென்மையானதுமாம் உன்
திருவடிகளால் பலரும் அறியத் தோற்கடிக்கப்பட்டு எப்போதும் அன்னங்களால் சூழப்பட்ட தாமரைகளும்,
துளிர்களும், வனத்தில் வசிக்கும் தவத்தை தொடங்குகின்றன.
அன்னையே நின்றன், அழகும் விழுமமும் ஆறெனவாம்
மென்மையும் கூடு மிருகழ லில்தோற்று வெண்மைபூத்த
அன்னங்கள் சூழ்ந்திட அம்புயங் கள்கூடி ஆம்துளிர்கள்
நன்னீர்
வனத்தினை நாடுமே காமாட்சீ நன்னிலைக்கே!
விழுமம்-தூய்மை; ஆறு-இயல்பொழுக்கு; ஆம்-அழகு; நன்னிலை-தவம்;
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam