அக்டோபர் 17, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 28

सदा किं सम्पर्कात्प्रकृतिकठिनैर्नाकिमकुटैः
तटैर्नीहाराद्रेरधिकमणुना योगिमनसा
विभिन्ते संमोहं शिशिरयति भक्तानपि दृशाम्
अदृश्यं कामाक्षि प्रकटयति ते पादयुगलम् २८॥

ஸதா³ கிம் ஸம்பர்காத் ப்ரக்ருʼதி கடி²னைர் நாகிமகுடை:
தடைர் நீஹாராத்³ரேரதிகமணுனா யோகி³மனஸா
விபிந்தே ஸம்மோஹம் ிிரயதி பக்தானபி த்³ருʼாம்
அத்³ருʼ்யம் காமாக்ஷி ப்ரகடயதி தே பாத³யுக³லம் 28

அம்மையின் பாதங்களை வணங்கும், சேர்ந்திருக்கும், தியானம் செய்யும் மூன்று செயல்களுமே எவ்விதம் அம்மையின் அருளைத் தருகின்றன என்பதை இச்செய்யுளில் கூறுகிறார் மூகர்.

காமாக்ஷீ! உன்னிரு திருவடிகளும், இயற்கையிலே திடமிக்கோராம் தேவர்களின் மணிமுடிகளுடன் இணைந்திருப்பதால் உறுதியுடன் அவித்தை, மாயையெனும் மனமயக்கத்தினை நீக்குகின்றனவா? பனிமலையை இருப்பிடங்களில் வதிப்பதினால் அடியவருளங்களைக் குளிர்விக்கும் தன்மையுற்றனவா? அணுவிலும் நுணுக்கமான யோகிகளின் மனத்துடன் ஏற்பட்ட தொடர்பால் ஊனக்கண்களுக்குப் புலப்படாதவற்றையும் காட்டும் திறனுள்ளவையோ? என்று அம்மையின் பாத சரணங்களின் அருளுக்கான காரணங்களை ஆராய்கிறார் மூககவி!

இயல்பில் இளகா இமைக்கார் மணிமுடி ஈண்டதாலெம்
மயல்நீக்கி, சீத மலைவதிப் பால்குளிர் வாக்கியேதன்
வயம்செய்து, சீர்நுண் மனயோ கியர்சார் வதால்செயும்சாத்
தியம்நுண் ணறிவும், திருவடி கள்காமாட் சீநினதே!


இயல்பில்-தன்னியற்கையில்; இளகா-உறுதியாம்; இமைக்கார்-தேவர்; மணிமுடி-கிரீடம்; ஈண்டது-இணைந்தது; மயல்-மனமயக்கம்; சீத-குளிர்; வதிப்பு-தங்குவது; சார்வு-தொடர்பு;

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...