कवीनां चेतोवन्नखररुचिसम्पर्कि विबुध-
स्रवन्तीस्रोतोवत्पटुमुखरितं हंसकरवैः ।
दिनारम्भश्रीवन्नियतमरुणच्छायसुभगं
मदन्तः कामाक्ष्याः स्फुरतु पदपङ्केरुहयुगम् ॥ २७॥
கவீநாம்
சேதோவன்னக²ரருசிஸம்பர்கி விபு³த⁴-
ஸ்ரவந்தீஸ்ரோதோவத்படுமுக²ரிதம் ஹம்ஸகரவை: ।
தி³னாரம்ப⁴ஶ்ரீவன்னியதமருணச்சா²யஸுப⁴க³ம்
மத³ந்த: காமாக்ஷ்யா: ஸ்பு²ரது பத³பங்கேருஹயுக³ம் ॥ 27॥
கவிகளின் எண்ணம்போல் மிருதுவான சொற்களின் அழகோடு (நகங்களின் ஒளியொடு)
கூடியதும், கங்கை வெள்ளம்போல் அன்னங்களோடு (பாதத்தில் அணியும் கால்சதங்கைகளின் இனிய
ஒலிகளோடு) கூடியதும், உதயகால அழகுபோல் அருணனுடைய செந்நிறத்தால் மனதிற்கினிமையாக உள்ள
காமாக்ஷீ தேவியின் திருவடித்தாமரைகள் இரண்டும் என் இதயத்தில் ஒளிரட்டும்!
பாவலர்
சித்தம்போல் பஞ்சன்ன சொற்கள் பளிச்சிடுமாம்,
மாவல கங்கைபோல்
வாவிப்புள் பேச்சொலி வவ்வியதாம்,
பாவும்
உதயப் பகலவன் செம்மைப் பதமுளம்கொள்
தேவிகா
மாட்சி திருவடி கள்நெஞ்சில் தேசுகவே!
பாவலர்-கவிகள்; பஞ்சன்ன-பஞ்சைப்போல் மிருதுவான; மாவல-பெரும் வலிய (கங்கைப்
பெருக்கினைக் குறிப்பது); வாவிப்புள்-அன்னம்; வவ்வியது-கவர்ந்தது; பாவும்-பரவும்; பதம்-அழகு;
தேசு-ஓளிர்தல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam