जगन्नेदं नेदं परमिति परित्यज्य यतिभिः
कुशाग्रीयस्वान्तैः कुशलधिषणैः शास्त्रसरणौ ।
गवेष्यं कामाक्षि ध्रुवमकृतकानां गिरिसुते
गिरामैदम्पर्यं तव चरण माहात्म्यगरिमा॥ २४॥
ஜக³ன்னேத³ம் நேத³ம் பரமிதி
பரித்யஜ்ய யதிபி:⁴
குஶாக்³ரீய ஸ்வாந்தை: குஶல தி⁴ஷணை: ஶாஸ்த்ர
ஸரணௌ ।
க³வேஷ்யம் காமாக்ஷி த்⁴ருவமக்ருʼதகாநாம்
கி³ரிஸுதே
கி³ராமைத³ம்பர்யம் தவ சரண-மாஹாத்ம்யகரிமா ॥ 24॥
காமாக்ஷீ! மலைமகளே! உனது பாதங்களின் சிறந்த பெருமை,
தருப்பை நுனிபோல் கூர்மையான சாத்திர ஞானமுள்ள துறவியர்கள் உலகிலனைத்தும் மேலானதல்ல
என்று தள்ளி, இவையே என்று தேர்ந்த சிறப்புடையவை, நிலைத்தவை!
மலைமகள் காமாட்சீ! மாணாம்நின் பாத மலர்களேபிஞ்
சலத்தின் நுனியன்ன தாரை அறிவினால் சாத்திரங்கள்
பலதேர் துறவோரும் பாரினில் இஃதின் பரமெதுவும்
இலையெனத் தேர்ந்த இருப்பும் சிறப்பும் இணைந்ததாமே!
பிஞ்சலம்-தருப்பை; இருப்பு-நிலைத்தது; தாரை-கூர்மை; மாண்-மேன்மையும் சிறப்பும்;
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam