कदा दूरीकर्तुं कटुदुरितकाकोलजनितं
महान्तं सन्तापं मदनपरिपन्थिप्रियतमे ।
क्षणात्ते कामाक्षि त्रिभुवनपरीतापहरणे
पटीयांसं लप्स्ये पदकमलसेवामृतरसम् ॥ २२॥
கதா³ தூ³ரீகர்தும் கடுது³ரித காகோல ஜனிதம்
மஹாந்தம்
ஸந்தாபம் மத³ன பரிபந்தி² ப்ரியதமே ।
க்ஷணாத்
தே காமாக்ஷி த்ரிபு⁴வன பரீதாப
ஹரணே
படீயாம்ஸம்
லப்ஸ்யே பத³கமலஸேவாம்ருʼதரஸம் ॥ 22॥
மன்மதனை எரித்த சிவனினுக்கினியாளே! காமாட்சீ! கொடிய பாவமென்னும் காகோல நஞ்சால் உண்டாய பெரும்
துயரம் அல்லது நலிவை நீக்குவதற்காக கண நேரத்தில் மூவுலகங்களின் துயர்களையும் போக்கவல்ல உனது திருவடித்தாமரை சேவை என்னும் அமுத
பானத்த நானென்று பெறுவேன்?
காமாரி காதலாள் காமாட்சீ! காகோலக் காளமாய
தீமானப் பாவம தின்பெருந் துன்பம் துடைத்துகண
மாமதில் மாற்றும் மனத்துயர் முப்பு வனமுழுதாம்,
தாமரைச் சேவடி தன்சே வமுதென்றோ தானெனக்கே?
காமாரி-காமனை எரிசெய் சிவன்; காகோலக் காளம்-காகோலமென்னும்
நஞ்சு; தீமான-மானக்கேடு; சேவடி-செம்மை பாதங்கள்; சேவு-சேவை!
[தீமானப் பாவம்- மானக்கேட்டைத் தரும் கொடியபாவம் என்று பொருள்
கொள்ளவேண்டியது.]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam