नमस्यासंसज्जन्नमुचिपरिपन्थिप्रणयिनी-
निसर्गप्रेङ्खोलत्कुरलकुलकालाहिशबले ।
नखच्छायादुग्धोदधिपयसि ते वैद्रुमरुचां
प्रचारं कामाक्षि प्रचुरयति पादाब्जसुषमा ॥ २१॥
நமஸ்யா
ஸம்ஸஜ்ஜன் நமுசி பரிபந்தி² ப்ரணயினீ-
நிஸர்க³ ப்ரேங்கோ²லத் குரலகுல காலாஹி ஶப³லே ।
நக²ச்சா²யாது³க்³தோ⁴ த³தி⁴ பயஸி தே
வைத்³ருமருசாம்
ப்ரசாரம்
காமாக்ஷி ப்ரசுரயதி பாதா³ப்³ஜ ஸுஷமா
॥ 21॥
காமாக்ஷியே! உனது பாதத்தாமரைகளின் அழகானது, உன்னை வணங்குவதில் ஈடுபட்ட
நமுசியின் (மகாபலியின் பிள்ளை) எதிரியாம் இந்திரனின் இல்லாளின் இயற்கையிலே அசையும்
சுரிகுழலாம், கருநாகத்தின் மேலுள்ள இரத்தினங்களின் ஒளிச்சிதறலால், விந்தையான வண்ணக்கலவைக்
கொண்ட நகவொளியாம் பாற்கடலின் வெள்ளத்தில், பவழக்கொடிகளின் ஒளிகளைப் பெரிதும்!பரவித்
திகழ்கிறதே1
கமலக் கழலெழில், காமாட்சீ! சேவிக்கும் காரியில்லாள்
சுமக்கும் அலையாம் சுரிகுழல் போலாம், துவிரசன்தாம்
சுமக்கும் இரத்தினச் சோதி யிலுகிரின் சோதியாம்பாற்
திமிகோ டவெள்ளம தில்பவ ழம்போல் திகழொளியே!
கழலெழில்-எழிற்கழல்; காரியில்லாள்- காரி+இல்லாள்-இந்திரன்
மனைவி; சுரிகுழல்-சுருண்ட கூந்தல்; துவிரசன்-நாகம்; உகிர்-நகம்; திமிகோடம்-கடல்
[இப்பாடலில்
கவியின் கருத்தை அதே நான்குவரிகள் என்னும் கட்டுக்குள் கொணர்வது மிகவும் கடினம் என்பதால், "நமுசி" போன்ற பாடலுக்கு அதிகம் தேவையில்லாத விவரணங்களை விலக்கி எழுதப்பட்டது.!]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam