அக்டோபர் 09, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 20

निषक्तं श्रुत्यन्ते नयनमिव सद्वृत्तरुचिरैः
समैर्जुष्टं शुद्धैरधरमिव रम्यैर्द्विजगणैः
शिवे वक्षोजन्मद्वितयमिव मुक्ताश्रितमुमे
त्वदीयं कामाक्षि प्रणतशरणं नौमि चरणम् २०॥

நிஷக்தம் ்ருத்யந்தே நயனமிவ ஸத்³வ்ருʼத்தருசிரை:
ஸமைர்ஜுஷ்டம் ுத்³தைரதரமிவ ரம்யைர்த்³விஜக³ணை:
ிவே வக்ஷோஜன்மத்³விதயமிவ முக்தா்ரிதமுமே
த்வதீ³யம் காமாக்ஷி ப்ரணதரணம் நௌமி சரணம் 20

மங்கள உருவே! உமையே! காமாக்ஷீ! கண்ணைப்போல சுருதிக்கருகே (காது) செல்வதும், உதடுகள் போல் சிறப்பும், ஒழுங்கும், ஒளியும் கொண்ட இருபிறப்பாளரொடு இணைந்ததும், இருதனங்கள் போல முத்துமாலை பூண்ட உன்னுடைய திருவடிகளை புகலடைகிறேன்!

பற்களும், அந்தணர்களும் இரு பிறப்பாளர்களாம்; பற்கள் ஒருமுறை விழுந்து மீண்டும் முளைப்பதாலும், அந்தணர்கள் தாயின் வயிற்றில் ஒருமுறையும், உபநயனத்தின் போது மீண்டும் பிறப்பதாகக் கருதப்படுவதாலும்! த்விஜ-கணை: என்பதால் பற்கள் கூட்டத்தையும் அந்தணர் கூட்டத்தையும் ஒருசொல் இருபொருளாகக் குறிக்கிறார் கவி. சுருதி என்பதும் வேதத்தையும், காதையும் குறிக்கும் ஒரு சொல். தனங்கள் மேல் முத்துமாலை பரவுவதுபோல, கவி அம்மையின் பாத நகங்களாம் முத்துமாலையைக் குறிப்பதும் நல்ல கற்பனை, கவிநயம்!

உருவில் சுபமே! உமையாளே காமாக்ஷீ! உன்விழிபோல்
சுருதிக் கருகிலே சூழ்வதும் ஓட்டத்தின் சோபையேபோல்
இருபிறப் பாளரை ஈண்டதும் முத்தால் இலம்பதைபூண்

இருதன மன்னநின் ஈரடி கள்தாமே என்புகலே!

சுபவுரு-மங்களமானது; சுருதி-வேதம்;செவி; ஓட்டம்-உதடு (ஓஷ்டம்); சோபை-அழகும், ஒழுங்கும், ஒளியும்; இலம்பம்-மாலை; ஈண்டல்-கூடுதல்;

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...