शिवे पाशायेतामलघुनि तमःकूपकुहरे
दिनाधीशायेतां मम हृदयपाथोजविपिने ।
नभोमासायेतां सरसकवितारीतिसरिति
त्वदीयौ कामाक्षि प्रसृतकिरणौ देवि चरणौ ॥ १९॥
ஶிவே பாஶாயேதாமலகு⁴னி தம: கூபகுஹரே
தி³னாதீ⁴ஶாயேதாம் மம ஹ்ருʼத³ய பாதோ²ஜ விபினே ।
நபோ⁴மாஸாயேதாம் ஸரஸ கவிதா ரீதி ஸரிதி
த்வதீ³யௌ காமாக்ஷி ப்ரஸ்ருʼதகிரணௌ தே³வி சரணௌ ॥ 19॥
மங்கள உருவே, தேவி! காமாக்ஷீ! ஒளிக்கதிர்களையுடைய
உன்பாதங்கள், பெரிய அறியாமையாம் பாழ்கிணற்றிலிருந்து வெளியே வர உதவும் கயிறாகட்டும்;
இதயமாம் தாமரைக்காட்டை மலர்விக்கும் ஆதவனாகட்டும்; இனிய கவிதை முறையென்னும் நதி பெருக,
ஆவணி மாதமாகட்டும். ஆவணி மாதம், மழை மாதமாகக் கருதப்படுகிறது.
கதிர்போல்நின் பாதங்கள் காமாட்சீ தேவி, கயிறெனவெம்
மதிமயக் கப்பாழாம் வாவியை நீங்க வகைசெயுமாம்;
கதிரோன்போல் உள்ளக் கமல வனத்தை கருவுறுத்தும்;
நதியாய் பெருகிடு நற்கவித் திங்கள் நபமவையே!
வாவி-கிணறு; கருவுறுத்தும்-மலர்த்தும்; நபம்-ஆவணிமாதம்;
மதிமயக்கம்-அறியாமை; உள்ளம்-மனம்; கமலம்-தாமரை;
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam