नमस्कुर्मः प्रेङ्खन्मणिकटकनीलोत्पलमहः-
पयोधौ रिङ्खद्भिर्नखकिरणफेनैर्धवलिते ।
स्फुटं कुर्वाणाय प्रबलचलदौर्वानलशिखा-
वितर्कं कामाक्ष्याः सततमरुणिम्ने चरणयोः ॥ १८॥
நமஸ்குர்ம:
ப்ரேங்க²ன்மணி
கடக நீலோத்பலமஹ:-
பயோதௌ⁴ ரிங்க²த்³பி⁴ர் நக²கிரண பே²னைர் த⁴வலிதே ।
ஸ்பு²டம் குர்வாணாய ப்ரப³ல சல தௌ³ர்வானல ஶிகா²-
விதர்கம்
காமாக்ஷ்யா: ஸததமருணிம்னே சரணயோ: ॥ 18॥
மிதக்கும் நகவொளிக் கீற்றுகளாம் நுரைகளால் வெண்மையுற்று,
ஒளிமிகு சிலம்புகளிலுள்ள நீலரத்தினக் கற்களின் ஒளிகடலில் எரிந்து கொண்டிருக்கும் படபாக்னியின்
தீப்பிழம்போ என்னும் ஐயத்தை உண்டாக்கும் காமாட்சீ பாதங்களின் செந்நிறத்தை எப்போதும்
வணங்குகிறோம்.
மிதக்கும் நகவொளி மின்கதிர் பேனத்தால் மிக்குவெண்மை
நெதிநூ புரத்தேசேர் நீலம ணிக்காந்தி நீரதியில்
நிதமெரி தீயதன் நீள்பிழம் போவென்று நெஞ்சுறுமற்
புதபாத செம்மையைப் போற்றுவோம் காமாட்சீ, போதெலாமே!
பேனம்-நுரை; மின்கதிர்-ஒளிர் கிரணம்; நெதி-செல்வம்;
நூபுரம்-சிலம்பு; நீலமணி-நீலரத்தினம்; நீரதி-கடல்; போதெலாம்-எப்போதும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam