அக்டோபர் 06, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 17

जपालक्ष्मीशोणो जननि परमज्ञाननलिनी-
विकासव्यासङ्गो विफलितजगज्जाड्यगरिमा
मनःपूर्वाद्रिं मे तिलकयतु कामाक्षि तरसा
तमस्काण्डद्रोही तव चरणपाथोजरमणः १७॥

ஜபாலக்ஷ்மீோணோ ஜனநீ பரம ஜ்ஞான லினீ-
விகாஸ வ்யாஸங்கோ³ விப²லித ஜக³ஜ் ஜாட்³ய க³ரிமா
மன:பூர்வாத்³ரிம் மே திலகயது காமாக்ஷி தரஸா
தமஸ் காண்ட³ த்³ரோஹீ தவ சரண பாதோ²ஜ ரமண: 17

தாயே! காமாக்ஷீ! செம்பரத்தம் பூவினொளிபோல் சிவந்து, பேரறிவாம்  தாமரையின் மலர்வில் முனைந்ததாய், உலகில் அறியாமையாம் இருளை நீக்கி, சோம்பலை அழிக்கும் உனது பாதப் பகலவன் விரைவில் என்றன் உள்ளமெனும் உதய மலையில் திலகமிடட்டும்

செம்பரத் தைபோல் சிவந்த வொளியதும் சீர்த்தஞான
அம்புயப் பூவில் அவாவுற்று அஞ்ஞான அல்லொழிப்ப
தும்சோம்பல் போக்கும்நின் தூபாத எல்லி சுடிகைசெய்க
எம்மெழு பர்வதம் ஏற்றி,தாய் காமாட்சீ இப்பொழுதே!


அவா-முனைந்த விழைவு; அல்-இருள்; தூபாத-தூயகழல்; எல்லி-சூரியன்; சுடிகை-திலகம்;

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...