அக்டோபர் 05, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 16

सरागः सद्वेषः प्रसृमरसरोजे प्रतिदिनं
निसर्गादाक्रामन्विबुधजनमूर्धानमधिकम्
कथंकारं मातः कथय पदपद्मस्तव सतां
नतानां कामाक्षि प्रकटयति कैवल्यसरणिम् १६॥

ஸராக:³ ஸத்³வேஷ: ப்ரஸ்ருʼமர ஸரோஜே ப்ரதி தி³னம்
நிஸர்கா³தா³க்ராமன் விபு³ஜன மூர்தானமதிகம்
கத²ம்காரம் மாத: கத²ய பத³பத்³மஸ்தவ ஸதாம்
நதாநாம் காமாக்ஷி ப்ரகடயதி கைவல்ய ஸரணிம் 16

தாயே காமாக்ஷீ! பற்றுள்ளதும், அலர்ந்த அம்புயத்திடம் பகையுள்ளதும், தேவர்கள், ஞானியர்கள் சிரங்களை வலிந்து கொள்வதுமாம் உன் திருவடித்தாமரைகள், வணங்கும் நல்லோர்க்கு மட்டும் எவ்வாறு முத்திவழியைக் காட்டுகிறது என்பதை விளக்கிச் சொல்வாய்!

பற்றுள் ளதும்மலர்ப் பங்கயத் தோடு பகையுளதும்
முற்றறி ஞானியர் மூவர்கள் தேவர்தம் மூர்த்தமெலாம்
பற்றி வலிந்துகொள் பாதாம் புயங்கள், பணிநலவர்
நற்றுணை யாமாறென் நல்குவாய் காமாட்சீ நன்நெறிக்கே!


பங்கயம்-தாமரை; மூர்த்தம்-தலை; நலவர்-நல்லோர்; ஆறு-வழி; நெறி-முத்தி;

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...