जागर्ति देवि करुणाशुकसुन्दरी ते
ताटङ्क रत्नरुचि दाडिम खण्डशोणे ।
कामाक्षि निर्भर कटाक्ष मरीचि पुञ्ज-
माहेन्द्र नीलमणि पञ्जर मध्यभागे ॥91॥
ஜாகர்தி தேவி கருணாஶுக ஸுந்தரீ தே
தாடங்க ரத்னருசி தாடிம கண்டஶோணே |
காமாக்ஷி நிர்பர கடாக்ஷ மரீசி புஞ்ஜ-
மாஹேந்த்ர நீலமணி பஞ்ஜர மத்யபாகே ||91||
தேவி! காமாக்ஷி! உனது கருணையாகிற அழகிய
பெண்கிளி, உன்னுடைய காதணிகளின் அழகிய சிவப்பு இரத்தினங்களாம் மாதுளை வித்துக்களால்
சிவந்து, உனது கடைக்கண்ணின் காந்தியால், இந்திர நீலமணியால் ஆகியதுபோல் தோன்றும் கூண்டின் நடுவே மிகவும் விழிப்புடன் இருக்கிறது.
உனது கருணையாம் ஒப்பமார் பெண்கிளி ஓலையிரத்
தினமாது ளைவித்தால் செம்மை நிறமுற்று
தேசுடைத்த
நினது கடைக்கண் நிறத்தால், புரந்தர நீலமணி
கனங்கொளும் கூண்டினில், காமாட்சீ, தங்கும்
கருத்துடனே!
ஒப்பம்- அழகு; ஓலை-காதணி; செம்மை-சிவப்பு; தேசு-காந்தி/ஓளி; புரந்தர-இந்திர; கனம்-பெருமை;
கருத்துடனே-விழிப்புடனே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam