मूको विरिञ्चति परं पुरुषः कुरूपः
कन्दर्पति त्रिदशराजति किम्पचानः ।
कामाक्षि केवलमुपक्रमकाल एव
लीलातरङ्गितकटाक्षरुचः क्षणं ते ॥74॥
மூகோ விரிஞ்சதி பரம் புருஷ: குரூப:
கந்தர்பதி த்ரிதஶராஜதி கிம்பசாந: |
காமாக்ஷி கேவலமுபக்ரம கால ஏவ
லீலா தரங்கித கடாக்ஷருச: க்ஷணம் தே ||74||
காமாக்ஷீ! விளையாடல் நிரம்பிய உனது கடைக்கண்
ஒளியானது ஒருவன் மேல் விழுந்த
கணத்திலேயே, அவன் ஊமையாயிருந்தால், சதுர்வேத வித்தாம் நான்முகனைப்போல ஆகிறான்! அருவருப்பான
உருவமுடையவனாயிருப்பின், மன்மதன்போல ஆகிறான். ஏழையாயிருப்பின் தேவேந்திரனாக ஆகிவிடுகிறான்!
விளையாடும் நின்றன் விழிக்கடை தேசு விழுந்தகணம்
விளைவானே ஊமையும் வேதவித் தாய விரிஞ்சனாக!
களையில் குரூபனும் காமனாம், காமாட்சீ,
கண்களுக்கு!
எளியனும் ஆவானே இந்தி ரனாக எளிதினிலே!
தேசு-ஒளி; விரிஞ்சன்-பிரமன்;
களை-ஒளி; குரூபன்-அருவருப்பானவன்; எளியகன்-தரித்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam