कामाक्षि घोर भवरोग चिकित्सनार्थ्म्
अभ्यर्ध्य देशिक कटाक्ष भिषक्प्रसादात् ।
तत्रापि देवि लभते सुकृती क्दाचित्
अत्य्न्त दुर्लभमपाङ्गमहौषधं ते ॥66॥
காமாக்ஷி கோர பவரோக சிகித்ஸனார்தம்
அப்யர்த்ய தேஶிக கடாக்ஷ பிஷக்
ப்ரஸாதாத் |
தத்ராபி தேவி லபதே ஸுக்ருதீ கதாசித்-
அத்யந்த துர்லபமபாங்கமஹௌஷதம் தே ||66||
தேவி காமாக்ஷி!
நல்லூழ் உள்ள புண்ணியர்கள், மீண்டும் மீண்டும் பிறந்திறக்கும் கொடும் நோயைப் போக்கிக்கொள்ள,
விசேடமாகத் துதித்து குருவினுடைய கடைக்கண்ணாம் மருத்துவனின் கருணையால் மிகவும் கிடைக்கற்கரிய
உன்னுடைய கடைக்கண் பார்வையையென்னும் உயர்ந்த மருந்தினை எப்போதாவது பெறுகிறான்.
புண்ணியர் மீண்டீண்டு போய்பிறக் கும்நோயைப்
போக்குதற்கு
மண்ணில் குருவின் மகிமைக் கடைக்கண் மருத்துவனின்
தண்ணளி யாலரி தாமரு ஔட தமாயதாமுன்
கண்கடை தான்பெற, காமாட்சீ என்றேனும் காண்குவனே!
மீண்டீண்டு - மீண்டும்
இங்கு; தண்ணளி-கருணை; ஔடதம்-மருந்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam