काकोलपावकतृणीकरणेऽपि दक्षः
कामाक्षि बालकसुधाकरशेखरस्य ।
अत्यन्तशीतलतमोஉप्यनुपारतं ते
चित्तं विमोहयति चित्रमयं कटाक्षः ॥64॥
காகோல பாவக த்ருணீகரணேऽபி தக்ஷ:
காமாக்ஷி பாலக ஸுதாகர ஶேகரஸ்ய |
அத்யந்த ஶீதலதமோऽப்யனுபாரதம் தே
சித்தம் விமோஹயதி சித்ரமயம் கடாக்ஷ: ||64||
காமாக்ஷீ தாயே!
காலகூட நஞ்சின் வெப்பத்தையும் துரும்புக்கே நிகரென்று செய்வதில் வல்லவராம், இளஞ்சந்திரனை
தலையில் சூடிய பரமசிவனார் மனத்தை உன்னுடைய கடைக்கண், மிகவும் குளிர்ந்திருந்தும் இடைவிடாமல்
மோகத்திலாழ்த்துகிறதே! விந்தையன்றே!
காலகூ டம்போல் கடுநஞ்சின் வெப்பமும்,
கண்ணறியா
தூலமில் லாத துரும்புக் குநிகராய் தோன்றிடச்செய்
பாலநி லாபூண் பரமர்க்கு மோகத்தைப் பற்றிடச்செய்
கோலகா மாட்சீ குளிர்கண் கடைவிந்தை கொண்டவளே
காலகூடம் - பாற்கடலில்
வந்த நஞ்சு;
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam