ஆகஸ்ட் 12, 2016

மூகபஞ்சசதீ - கடாக்ஷ சதகம் - 63

कादम्बिनी किमयते जलानुषङ्गं
भृङ्गावली किमुररीकुरुते पद्मम्
किं वा कलिन्दतनया सहते भङ्गं
कामाक्षि निश्चयपदं तवाक्षिलक्ष्मीः 63

காதம்பினீ கிமயதே ஜலானுஷங்கம்
ப்ருங்காவலீ கிமுரரீ குருதே பத்மம் |
கிம் வா கலிந்ததனயா ஸஹதே பங்கம்
காமாக்ஷி நிஶ்சயபதம் தவாக்ஷிலக்ஷ்மீ: ||63||

காமாக்ஷீ! மேகக்கூட்டம் நீரோடிணையவில்லையா? வண்டுகளின் கூட்டம்தான் தாமரையின் சேர்க்கையில் ஒன்றவில்லையா? களிந்த பர்வதத்தின் குமாரியாம், யமுனையானது, கங்கையைப் பொறுத்துக்கொள்ளவில்லையா? ஆயின் உன் கடைகண்ணாம் இலட்சுமிமட்டும் ஏன் நிலைத்தன்மையைப் பெறாமலிருக்கிறது. இந்த ஸ்லோகத்தில் சலனத்தையே இயல்பாய் கொண்டவையெல்லாம், நிலைத்தன்மையை விரும்புகையில், தாயின் கடைக்கண் விலாஸம் மட்டும் அலையும் தன்மை கொண்டிருக்கும் காரணமேன் என்று கேட்கிறார் மூககவி.

வான்மேகம் நீரின் வயமாக வில்லையா? வண்டுகளும்
தான்கூடி நீர்மலர் தாமரை யைசார்தல் தானிலையா?
ஆன்ற யமுனையும் ஆறாம்கங் கைதனை ஆற்றசரம்
ஏன்காமாட் சீயுன் எழில்பார்வை என்னும் இலக்குமிக்கே!

வயம் - இணைதல்; சார்தல் - ஒன்றுதல்; ஆன்ற - அகன்ற; ஆற்ற - பொறுக்க; சரம் - சஞ்சலம்; சலனம்;

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...