जन्तोः सकृत्प्रणमतो जगदीड्यतां च
तेजास्वितां च निशितां च मतिं सभायाम् ।
कामाक्षि माक्षिकझरीमिव वैखरीं च
लक्ष्मीं च पक्ष्मलयति क्षणवीक्षणं ते ॥62॥
ஜந்தோ: ஸக்ருத ப்ரணமதோ ஜகதீட்யதாம் ச
தேஜாஸ்விதாம் ச நிஶிதாம் ச மதிம் ஸபாயாம் |
காமாக்ஷி மாக்ஷிக ஜரீமிவ வைகரீம் ச
லக்ஷ்மீம் ச பக்ஷ்மலயதி க்ஷண வீக்ஷணம் தே ||62||
காமாக்ஷீ! உனது ஒருகணப் பார்வையானது,
உன்னை வணங்கு மனிதனுக்கு உலகத்தால் புகழப்படுவதையும், ஒளியையும், கூர்மையான அறிவையும்,
அவையில் தேனருவிபோன்ற வாக்கினையும், செல்வத்தையும் பெருகச் செய்கிறதே!
உன்னை வணங்க, ஒருகண நோக்கால் உலகிலென்றும்
மின்னும் புகழொளி மிக்ககூர் மையான மேதமையாம்;
சென்ற அவையெலாம் செந்தேன் அருவியாய் செப்புமொழி,
பொன்றாத செல்வமும் பொங்கிக்கா மாட்சீ பொழிகிறதே!
ஒளி - தேசு; மேதமை - கூர்த்த அறிவு;
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam