ஆகஸ்ட் 10, 2016

மூகபஞ்சசதீ - கடாக்ஷ சதகம் - 61

आश्चर्यमम्ब वदानाभ्युदयावलम्बः
कामाक्षि चञ्चलनिरीक्षणविभ्रमस्ते
धैर्यं विधूय तनुते हृदि रागबन्धं
शम्भोस्तदेव विपरीततया मुनीनाम् 61

ஶ்சர்யமம்ப தானாப்யுதயாவலம்ப:
காமாக்ஷி சஞ்சல நிரீக்ஷண விப்ரமஸ்தே |
தைர்யம் விதூய தனுதே ஹ்ருதி ராகபந்தம்
ம்போஸ் ததேவ விபரீததயா முனீனாம் ||61||

அன்னையே காமாக்ஷி! உனது முகக் காந்திக்கு காரணமாம் உன்றன் சஞ்சலமான, அலைகின்ற கடைக்கண் பார்வையின் அழகு ஈசரின் நெஞ்சுரத்தை வென்று அவருக்கு வேட்கையை நெஞ்சில் விதைக்கிறது. ஆயினும் அதே பார்வை முனிவர்கள் ஊள்ளங்களுக்கு உரம் அளித்து, அவர்களது ஆசையை விலக்குகிறதே! இது வியப்பே!

அன்னைகா மாட்சீயுன் ஆனனக் காந்தியின் ஆதியான
உன்றன் அலையும் ஒசிந்தபார் வையதன் ஒட்பமது
வென்றீசர் நெஞ்சுரம், வேட்கை யுளத்தில் விதைத்திடினும்
நன்முனி வர்க்குரம் நல்கி, விலக்கும் நசை,வியப்பே!


ஆனனம் - முகம்; காந்தி - ஒளி; ஆதி - காரணம்; அலைவு - சஞ்சலம்; ஒசிந்த பார்வை - சாய்ந்த பார்வை (கடைக்கண்); ஒட்பம் - அழகு; வேட்கை - ஆசை; உரம் - தைரியம்; நசை - ஆசை;

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...