कामाक्षि वीक्षणरुचा युधि निर्जितं ते
नीलोत्पलं निरवशेषगताभिमानम् ।
आगत्य तत्परिसरं श्रवणवतंस-
व्याजेन नूनमभयार्थनमातनोति ॥60॥
காமாக்ஷி வீக்ஷணருசா யுதி நிர்ஜிதம் தே
நீலோத்பலம் நிரவஶேஷ கதாபிமானம் |
ஆகத்ய தத் பரிஸரம் ஶ்ரவணவதம்ஸ-
வ்யாஜேன நூனமபயார்தனமாதனோதி ||60||
காமாக்ஷீ! உன் பார்வையின்
ஒளியால், வெற்றிக்கொள்ளப்பட்ட கருநெய்தல் மலர், தன்னுடைய மானத்தை முற்றும் இழந்து,
உன் கடைக்கண்களின் அருகில் வந்து காதிலணியும் பூவணியாக தஞ்சம் அடைந்து உன்னுடைய அபயத்தை
வேண்டுகிறது என்பதில் ஐயமில்லை!
உன்பார்வை காந்தி உரன்கொள் வதாகின்ற உற்பலப்பூ
தன்மானம் முற்றுமாய் தானிழந் தேயுன்றன்
சாய்விழிகள்
தன்னரு கில்கா தணிந்த மலர்த்தோடாய் தஞ்சமுற்று
நின்னப யம்வேண்டி நிற்பது, காமாட்சீ!
நிச்சயமே!
உரன் - வெற்றி;
உற்பலம் - நீலோத்பலம்; கருநெய்தல்; சாய்விழிகள்-கடைக்கண்கள்;
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam