ஆகஸ்ட் 08, 2016

மூகபஞ்சசதீ - கடாக்ஷ சதகம் - 59

चक्षुर्विमोहयति चन्द्रविभूषणस्य
कामाक्षि तावककटाक्षतमःप्ररोहः
प्रत्यङ्मुखं तु नयनं स्तिमितं मुनीनां
प्राकाश्यमेव नयतीति परं विचित्रम् 59

சக்ஷுர் விமோஹயதி ந்த்ர விபூஷணஸ்ய
காமாக்ஷி தாவக கடாக்ஷ தம: ப்ரரோஹ: |
ப்ரத்யங் முகம் து நயனம் ஸ்திமிதம் முனீனாம்
ப்ராகாஶ்யமேவ நயதீதி பரம்விசித்ரம் ||59||

தேவி காமாக்ஷீ! உன் கடைக்கண் இருட்டடிப்பு மதிசேகரன் சிவனது கண்களை மறைக்கிறது. ஆனால் உள்ளத்தால் அசைவற்ற, உள்வய நோக்கும் முனிவர்களின் அறிவுக் கண்களை வெளிச்சத்துக்கு அழைத்துச் செல்வது, வெகு விந்தையாமே!

இருள்செய்நின் கண்கடை இந்தணிந் தார்கண் இடையிடுமாம்!
அருளன்னை காமாட்சீ! ஆயின், அகத்தில் அசைவிலாது
கருதியுள் நோக்கும் கருமத்தார் காண்கையாம் கண்களுக்கு
விரும்பி யொளிகூட்டும் விந்தையென் சொல்வேன் வியப்பதுவே!


இந்தணிந்தார் - சந்திரசேகரன், சிவன்;  காண்கை - அறிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...