हृत्पङ्कजं मम विकासयतु प्रमुष्णन
उल्लासमुत्पलरुचेस्तमसां निरोद्धा ।
दोषानुषङ्गजडतां जगतां धुनानः
कामाक्षि वीक्षणविलासदिनोदयस्ते ॥58॥
ஹ்ருத் பங்கஜம் மம விகாஸயது ப்ரமுஷ்ண-
உல்லாஸமுத்பலருசேஸ்
தமஸாம்
நிரோத்தா |
தோஷானுஷங்க ஜடதாம் ஜகதாம் துனான:
காமாக்ஷி வீக்ஷண விலாஸ தினோதயஸ்தே ||58||
ஹே காமாக்ஷீ! உனது கடைக்கண்ணாம் அருணோதயமானது,
கருநெய்தல் மலர்களின் ஒளி மங்கும்படியாகவும், அறியாமையாம் இருளை விலக்கியும், உலகத்தின்
அயர்ச்சியாம் குறைகளால் ஏற்படும் இயக்கமின்மையை அகற்றுவதாய் என்னுடைய இதயமாகிற தாமரையை
மலரச் செய்யட்டும்.
அருணோ தயமாமுன் அட்சக் கடையின் அழகினொளி
கருநெய் தலதனின் காந்தியும் குன்றிட கங்குலதாம்
இருளை விலக்கி இகத்தில் இலங்கும் இயக்கமின்மை
மருளைநீக் கட்டும் மனத்தா மரையும் மலர்ந்திடவே!
கங்குல்- இரவு; இருள் - அறியாமை; மருள்
- மயக்கறிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam