कामाक्षि काष्णर्यमपि सन्ततमञ्जनं च
बिभ्रन्निसर्गतरलोऽपि भवत्कटाक्षः ।
वैमल्यमन्वहमनञ्जनतां च भूयः
स्थैर्यं च भक्तहृदयाय कथं ददाति ॥42॥
காமாக்ஷி காஷ்ணர்யமபி ஸந்ததமஞ்ஜனம் ச
பிப்ரன் நிஸர்க தரலோऽபி பவத்கடாக்ஷ: |
வைமல்யமன்வஹமனஞ்ஜனதாம் ச பூய:
ஸ்தைர்யம் ச பக்த ஹ்ருதயாய கதம் ததாதி ||42||
காமாக்ஷி! உன்னுடைய கடைக்கண் இயல்பாக கருநிறத்தோடும், கண்மையை
இட்டுக்கொண்டதாகவும் உள்ளதோடு, எப்போது அலையும் தன்மை கொண்டது! எனினும் உன்னிடம் பக்தி
செலுத்தும் அன்பர்களின் இதயங்களுக்கு களங்கமில்லா (ஊனம்), கருமையில்லா நிலயை எப்போதும் எப்படித் தருகிறது?
கருநிறத் தோடென்றும் கண்மைபூ சும்நின் கடைவிழிகள்
இருந்து அலைவதாம் எப்போதும், காமாட்சீ! என்றபோதும்
உருகுமுன் அன்பர்தம் உள்ளங் களிலெல்லாம் ஊனமொடு
கருமையு மில்லா கருணையெவ் வாறென்றும் காட்டுவதே
ஊனம் - குறை, களங்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam