ஜூலை 23, 2016

மூகபஞ்சசதீ - கடாக்ஷ சதகம் - 43

मन्दस्मितस्तबकितं मणिकुण्डलांशु-
स्तोमप्रवालरुचिरं शिशिरीकृताशम्
कामाक्षि राजति कटाक्षरुचेः कदम्बम्
उद्यानमम्ब करुणाहरिणेक्षणायाः 43

மன்தஸ்மிதஸ்தபகிதம் மணிகுண்டலாம்ஶு-
ஸ்தோமப்ரவால ருசிரம் ஶிஶிரீக்ருதாம் |
காமாக்ஷி ராஜதி கடாக்ஷருசே: கதம்பம்
உத்யானமம்ப கருணாஹரிணே க்ஷணாயா: ||43||

தாயே! காமாக்ஷீ! புன்சிரிப்பாம் பூங்கொத்துள்ளதும், மணிநிறை குண்டலங்களின் ஒளியாம் தளிரோடு கூடியதும், திசைகளை குளிரச்செய்வதுமான உனது கடைக்கண் ஒளியின் கூட்டமானது, கருணையென்னும் பெண்ணுடைய பூந்தோட்டம்போல் இருக்கிறது.

புன்சிரிப் பாகிய பூங்கொத் துடையதும் பொன்மணிசேர்
மின்குண்ட லங்கள் மிளிர்வாம் தளிரொடு மேவுவதும்
நன்றாய் திசைகள் நளிர்செய்யுன் கண்கடை நல்குமொளி,
கன்னியாம் காருண்ய காபோலாம் காமாட்சீ கன்னலாளே!


நளிர் - குளிர்ச்சி; மிளிர் - ஒளி; கா - சோலை; கன்னல் - கரும்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...