कामाक्षि सन्ततमसौ हरिनीलरत्न-
स्तम्भे कटाक्षरुचिपुञ्जमये भवत्याः ।
बद्धो_ऽपि भक्तिनिगलैर्मम चित्तहस्ती
स्तम्भं च बन्धमपि मुञ्चति हन्त चित्रम् ॥41॥
காமாக்ஷி ஸன்ததமஸௌ ஹரிநீலரத்ன-
ஸ்தம்பே கடாக்ஷருசி புஞ்ஜமயே பவத்யா: |
பத்தோ_ऽபி பக்தி நிகளைர் மம சித்தஹஸ்தீ
ஸ்தம்பம் ச பந்தமபி முஞ்சதி ஹந்த சித்ரம் ||41||
காமாக்ஷீ! என் சித்தமாம் யானை, உனது கடைக்கண் ஒளித்திரள் கூடிய இந்திர நீலரத்தினத்தாலான, தூணில் பக்தி என்னும் சங்கிலியால் பிணைக்கப்பட்டதும், அப்போதே அறியாமையாம் தூணையும், ஊழ்ப்பயன் என்னும் பிணைப்பையும் விட்டுவிடுகிறது! விந்தையன்றோ!
உந்தன் கடைக்கண் ஒளித்திரட் கூட்டினை உற்றுமின்னும்
இந்திர நீல இரத்தினத் தூணில் இலங்குபக்தி
அந்ததால் கட்டவும் ஆனையாம் சித்தம் அபோதமாய
கந்தையூழ், கட்டின்று காமாட்சீ விந்தை! கதித்ததன்றே!
அந்தம் - யானைச்சங்கிலி; அபோதம் - அறியாமை; கந்தை - தூண்; ஊழ்கட்டு - வினைப்பயன்; கதித்தல் - விரைந்தோடுதல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam