ஜூலை 18, 2016

மூகபஞ்சசதீ - கடாக்ஷ சதகம் - 38

आरम्भलेशसमये तव वीक्षणस्य
कामाक्षि मूकमपि वीक्षणमात्रनम्रम्
सर्वज्ञता सकललोकसमक्षमेव
कीर्तिस्वयंवरणमाल्यवती वृणीते 38

ஆரம்ப லேஸமயே தவ வீக்ஷணஸ்
காமாக்ஷி மூகமபி வீக்ஷணமாத்ர நம்ரம் |
ஸர்வஜ்ஞதா ஸகலலோக ஸமக்ஷமேவ
கீர்திஸ்வயம்வரண மால்யவதீ வ்ருணீதே ||38||

ஹே காமாக்ஷி! உன்னுடைய கடைக்கண் பார்வையொன்றே போதுமென்று வணங்கும் ஊமையையும், உன் பார்வை விழத் தொடங்கும் நொடியிலேயே, உலகோர் முன்னிலையில் “எல்லாமறிந்த நிலை” என்னும் கன்னி, “புகழ்” என்னும் சுயம்வர மாலையை ஏந்தி வரிக்கிறாள்! இப்பாடல் மூககவி தன்னுடைய சுய அனுபவத்தை கூறுவதாகவே அமைந்திருப்பதை கவனிக்கலாம்.

உன்கடைக் கண்பார்வை ஒன்றே விரும்பிய ஊமையையும்
உன்பார்வை பட்ட ஒருகணந் தன்னில் உலகினர்முன்
கன்னியாம் யாவும் கரைகண்ட ஞானமே, கையிலேந்தி
இன்புகழ் மாலையை இட்டுடன், காமாட்சீ! ஏற்றிடுமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...