ஜூலை 19, 2016

மூகபஞ்சசதீ - கடாக்ஷ சதகம் - 39

कालाम्बुवाह ते परितापहारी
कामाक्षि पुष्करमधःकुरुते कटाख़्षः
पूर्वः परं क्षणरुचा समुपैति मैत्री-
मन्यस्तु ततरुचिं प्रकटीकरोति 39

காலாம்புவாஹ உவ தே பரிதாபஹாரீ
காமாக்ஷி புஷ்கரமத: குருதே கடாக்ஷ: |
பூர்வ: பரம் க்ஷணருசா ஸமுபைதி மைத்ரீ-
மன்யஸ்து ஸந்ததருசிம் ப்ரகடீகரோதி ||39||

காமாக்ஷியே! உன் கடைக்கண் கார்மேகம்போல் மக்களின் வருத்தமாம் தாபத்தைப் போக்குகிறது. அது ஊழிக்காலத்து பெருவெள்ளமாய் பெய்கிற புஷ்கர மேகத்தையும் தாழ்த்திவிடும், கார்மேகமோ ஒரு கணத்துக்கு மின்னல் ஒளியொடு நட்பு கொள்கிறது, உன் பார்வையோ எப்போதுமுள்ள பேரொளியை வெளிப்படுத்துகிறது.

கார்மேகம் போல்மக்கள் கஷ்டம்நீக் கும்நின் கடைவிழிகள்
ஆர்கலி ஊழியின் அம்பதன் கீழே அடங்குவதாம்
கார்மேகம் கொள்ளும் கனருசி நட்போ கணமதாமுன்
பார்வையோ காமாட்சீ பாரினில் என்றும் பகுவொளியே


ஆர்கலி - வெள்ளம்; ஊழி - வெள்ளம்; அம்பு - மேகம்; கனருசி - மின்னல்; பகுவொளி - பேரொளி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...