धूमाङ्कुरो मकरकेतनपावकस्य
कामाक्षि नेत्ररुचिनीलिमचातुरी ते ।
अत्यन्तमद्भुतमिदं नयनत्रयस्य
हर्षोदयं जनयते हरिणाङ्कमौलेः ॥37॥
தூமாங்குரோ மகரகேதன பாவகஸ்ய
காமாக்ஷி நேத்ரருசி நீலிம சாதுரீ தே |
அத்யன்தமத்புதமிதம் நயனத்ரயஸ்ய
ஹர்ஷோதயம் ஜனயதே ஹரிணாங்கமௌலே: ||37||
காமாக்ஷியே! உன் கடைக்கண் காந்தியின்
கருப்பு நிறமாவது, மன்மதனாம் நெருப்பின் புகைக்கொடி போலிருந்தும், சந்திரசேகரனாரின்
மூன்று கண்களுக்கும் மகிழ்ச்சியையன்றோ தருகிறது! விந்தை!
காமாட்சீ உன்கடைக் கண்ணொளி காட்டும் கருப்புநிறம்
காமனாம் தீபோல் கனன்றே எழுந்தாங்கே கக்கிடினும்
தூமத்தை, சந்திர சூடியின் மூன்று சுடர்விழிகள்
தாமகிழ் வேகொள்ள தக்கதா யிற்றே!விந் தையிதன்றே!
தூமம்-புகை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam