कालाञ्जनं च तवदेवि निरीक्षणं च
कामाक्षि साम्यसरणिं समुपैति कान्त्या ।
निश्शेषनेत्रसुलभं जगतीषु पूर्व-
मन्यत्त्रिनेत्रसुलभं तुहिनाद्रिकन्ये ॥36॥
காலாஞ்ஜனம் ச தவதேவி நிரீக்ஷணம் ச
காமாக்ஷி ஸாம்யஸரணிம் ஸமுபைதி காந்த்யா |
நிஶ்ஶேஷ நேத்ர ஸுலபம் ஜகதீஷு பூர்வ-
மன்யத் த்ரிநேத்ர ஸுலபம் துஹினாத்ரி
கன்யே
||36||
இமவான் மகளே! தேவி காமாக்ஷி! கருப்பு
கண்மையும், உனது கடைக்கண் கருவிழியும் ஒளியிலொக்கும்; ஆயினும் கருப்பு மையானது உலகில்
யாரின் விழிகட்கும் எளிதில் கிடைக்கக்கூடியது. மற்றதான உன் கடைக்கண் அருளோ முக்கண்ணனார்தம்
மூன்று விழிகளுக்கே எளிதென்று நினைக்கிறேன்.
கண்மையை ஒத்தது காமாட்சீ நின்விழிக் காந்தியதாம்
கண்மையோ ஞாலத்தில் கண்ணுளோர் யார்க்கும் கடினமில்லை
உண்மையில் மற்றதாம் உன்கடைக் கண்ணருள் உள்ளதுமுக்
கண்ணனார் தம்மூன்று கண்களுக்
கேயாம் கடினமற்றே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam