भ्रान्त्वा मुहुः स्तबकितस्मितफेनराशौ
कामाक्षि वक्त्ररुचिसञ्चयवारिराशौ ।
आनन्दति त्रिपुरमर्दननेत्रलक्ष्मीः
आलम्ब्य देवि तव मन्दमपाङ्गसेतुम् ॥34॥
ப்ராந்த்வா முஹு: ஸ்தபகிதஸ்மிதபேனராஶௌ
காமாக்ஷி வக்த்ரருசி ஸம்சய வாரிராஶௌ |
ஆனந்ததி த்ரிபுரமர்தன நேத்ரலக்ஷ்மீ:
ஆலம்ப்ய தேவி தவ மந்தம் அபாங்கஸேதும் ||34||
காமாக்ஷி தேவியே!
திரிபுரம் அழித்த பரமசிவனது பார்வையாம் திருமகள், உன் புன்னகைக் கூட்டமாம் நுரையுடன்
கூடிய முகவொளிக் கடலில், நீந்திக் களைத்து, மெதுவாக உனது கடைக்கண்ணாம் கரையைச் சார்ந்தடைந்து
களிக்கிறாள்
திரிபுரம் தீய்த்த சிவனார்பார் வையாம்சீ
தேவியுன்குஞ்
சிரிப்பின் திரள்நுரை சேர்முகக் காந்தித்
திரைகடலில்
திரிந்துப் புடைத்துத் திளைத்துக் களைத்துப்பின் சேருதேயுன்
கரிவிழி யாம்கரை, காமாட்சீ தேவீ களிப்புடனே
தீய்த்த - அழித்த; குஞ்சிரிப்பு - புன்னகை;
திரள்நுரை - நுரைத்திரள்; காந்தி - ஒளி; செருக்கு - மகிழ்ச்சி; புடைத்து - நீந்தி;
கரிவிழி - கருவிழி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam