श्रौतीं व्रजन्नपि सदा सरणिं मुनीनां
कामाक्षि सन्ततमपि स्मृतिमार्गगामी ।
कौटिल्यमम्ब कथमस्थिरतां च धत्ते
चौर्यं च पङ्कजरुचां त्वदपाङ्गपातः ॥32॥
ஶ்ரௌதீம் வ்ரஜன்னபி ஸதா ஸரணிம் முனீனாம்
காமாக்ஷி ஸன்ததமபி ஸ்ம்ருதி மார்க
காமீ
|
கௌடில்யமம்ப கதமஸ்திரதாம் ச தத்தே
சௌர்யம் ச பங்கஜருசாம் த்வதபாங்கபாத: ||32||
அம்மையே காமாக்ஷி!
உன் கடைக்கண்ணானது வேதவழியைப் பின்பற்றுவதாயிருப்பினும், முனிவர்களுடைய சுமிருதி வழியிலேயே
எப்போதும் இருப்பினும், ஏன் இந்த மாறுபாடான, ஒவ்வாப் போக்கையும், நிலையில்லாத தன்மையையும்,
தாமரைப்பூவின் ஒளியையும் திருடும் பழக்கத்தையும் கைகொண்டுள்ளது? இந்தப் பாடல் ஒரு நிந்தாத்துதியாகச்
சொல்லப்படுகிறது. குடிலம்/கௌடில்யம் என்பது கோணல் புத்தியைக் குறிக்கும்.
அன்னைகா மாட்சீயுன் அக்கக் கடையது ஆரணத்தைப்
பின்பற்றி ஆரிடர் பெற்ற சுமிருதிப் பேறொடென்றும்
நின்றாலும் ஏன்கொள்ளும் நேரின்றி மற்றும்
நிலையிலாது
பன்மத் தொளியை பரிக்கின்ற தீய பழக்கமதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam