ஜூலை 11, 2016

மூகபஞ்சசதீ - கடாக்ஷ சதகம் - 31

स्नेहादृतां विदलितोत्पलकान्तिचोरां
जेतारमेव जगदीश्वरि जेतुकामः
मानोद्धतो मकरकेतुरसौ धुनीते
कामाक्षि तावककटाक्षकृपाणवल्लीम् 31

ஸ்னேஹாத்ருதாம் விதலிதோத்பல காந்தி சோராம்
ஜேதாரமேவ ஜகதீஶ்வரி ஜேதுகாம: |
மானோத்ததோ மகரகேதுரஸௌ துனீதே
காமாக்ஷி தாவக கடாக்ஷ க்ருபாணவல்லீம் ||31||

உலகின் ஈச்வரியே! காமாக்ஷி! தன்மானமுள்ளவனாம் இந்த மன்மதன், சிவனை வெல்லும் ஆசையில், நட்பால் கூராக்கப்பட்டதும், மலர்ந்த நீலாம்பல் மலரின் ஒளியைப் பரிப்பதுமான, உன் கடைக்கண்ணாம் வாளினைச் சுழற்றி வீசுகிறான்.

மானியாம் மன்மதன் மாதேவ ரைவெல்லும் மாலுடைத்து
தீனமாம் எண்ணையால் தீட்டியே கூராக்கித் திண்மையுற்ற,
தேனுடை நீலாம்பல் தேசைப் பரித்த சிரிகடைக்கண்
ஆனதை வீசுவான் ஆங்கேகா மாட்சிபூ அன்னையளே


மானி - தன்மானமுள்ளவன்; மாதேவர் - ஈசன்; மாலுடைத்து - ஆசைகொண்டு; தீனம் - நட்பு; திண்மை - வலிமை; தேசு - ஒளி; சிரி - வாள்; பூவன்னை - உலகின்தாய், செகதீஸ்வரி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...