उद्वेल्लितस्तबकितैर्ललितैर्विलासैः
उत्थाय देवि तव गाढकटाक्षकुञ्जात् ।
दूरं पलाययतु मोहमृगीकुलं मे
कामाक्षि स्तवरमनुग्रहकेसरीन्द्रः ॥30॥
உத்வேல்லித ஸ்தபகிதைர் லலிதைர் விலாஸை:
உத்தாய தேவி தவ காடகடாக்ஷகுஞ்ஜாத் |
தூரம் பலாயயது மோஹ ம்ருகீகுலம் மே
காமாக்ஷி ஸ்தவரமனுக்ரஹ கேஸரீந்த்ர: ||30||
காமாக்ஷி தேவியே! உன்
அருளாம் பெருஞ்சிங்கம் பிடரி மயிரைச் சிலிர்த்துக்கொண்டு, அழகிய நடையுடன் உன் கடைக்கண்ணாம்
அடர்ந்த புதரிலிருந்து வெளிவந்து, என்னுடைய அறியாமையாம் மான்கூட்டத்தை விரைவாய் துரத்தி
விரட்டட்டும்!
அருளாம் அரிமா அரசன் சிரகேசம் ஆங்கெழுந்து
அரிநடை யோடுன்றன் அக்கக் கடையாம் அடர்புதருள்
இருந்து வெளியேறி என்னிருள் மான்கூட்டம் என்பதனை
விரட்டித் துரத்ததே வீதாய்கா மாட்சீ விரைந்தருளே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam