उन्मथ्य बोधकमलाकारमम्ब जाड्य-
स्तम्बेरमं मम मनोविपिने भ्रमन्तम् ।
कुण्ठीकुरुष्व तरसा कुटिलाग्रसीम्ना
कामाक्षि तावककटाक्षमहाङ्कुशेन ॥29॥
உன்மத்ய போதகமலாகாரமம்ப ஜாட்ய-
ஸ்தம்பேரமம் மம மனோவிபினே ப்ரமன்தம் |
குண்டீகுருஷ்வ தரஸா குடிலாக்ரஸீம்னா
காமாக்ஷி தாவக கடாக்ஷ மஹாங்குஶேன ||29||
தாயே! காமாக்ஷி! உன் கடைக்கண்ணாம் கூரிய
அங்குசத்தினால், என் அறிவாம் தாமரைக் மலர்க் குளத்தை கலக்கி, மலர்களை நசுக்கி, எனது
மனமாகிய காட்டில் சுற்றிக்கொண்டிருக்கிற, அறியாமையான யானையை விரைவாய் அடக்குவாயாக!
உன்கடைக் கண்ணாம் உயரங் குசத்தால் உடன்விரைந்து,
என்றன் அறிவாம் எழில்தா மரைபூக்கள் இன்னலுறப்
பொன்ற நசுக்கிப் புறவென் மனத்திடை போய்ச்சுழலும்,
அன்னைகா மாட்சி, அடக்கு! அறியாமை ஆனையையே
புறவு - காடு; ஈண்டு
- விரைந்து; பொன்ற - முற்றுமழிய;
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam