माहेश्वरं झटिति मानसमीनमम्ब
कामाक्षि धैर्यजलधौ नितरां निमग्नम् ।
जालेन शृङ्खलयति त्वदपाङ्गनाम्ना
विस्तारितेन विषमायुधदाशकोऽसौ ॥28॥
மாஹேஶ்வரம் ஜடிதி மானஸமீனமம்ப
காமாக்ஷி தைர்யஜலதௌ நிதராம் நிமக்னம் |
ஜாலேன ஶ்ருங்கலயதி த்வதபாங்கனாம்னா
விஸ்தாரிதேன விஷமாயுததாஶகோऽஸௌ ||28||
அன்னையே! காமாக்ஷி! மன்மதனாம் மீனவன்,
உன் கடைக்கண்ணாம் வலையை விரித்து, துணிவென்னும் கடலில் அமிழ்ந்துள்ள ஈசனின் மனமாகிய
மீனை விரைவில் பிடித்துக் கட்டிவிடுகிறான்.
மன்மதனாம் மீனவன், மாதாகா மாட்சீ! வலையாகும்
நின்கடைக் கண்ணினால் நெஞ்சுர மாகிய நீர்க்கடலில்
என்றும் அமிழ்ந்துறை ஈசன் மனமாய் இலங்குமீனை
நன்றாய் விரைவினில் ஞாத்திடு வானே நயமுடனே
ஞாத்தல் - கட்டிப்போடுதல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam