ஜூலை 07, 2016

மூகபஞ்சசதீ - கடாக்ஷ சதகம் - 27

वागीश्वरी सहचरी नियमेन लक्ष्मीः
भ्रूवल्लरीवशकरी भुवनानि गेहम्
रूपं त्रिलोकनयनामृतमम्ब तेषां
कामाक्षि येषु तव वीक्षणपारतन्त्री 27

வாகீஶ்வரீ ஸஹசரீ நியமேன லக்ஷ்மீ:
ப்ரூவல்லரீ வகரீ புவனானி கேஹம் |
ரூபம் த்ரிலோக நயனாம்ருதம் அம்ப தேஷாம்
காமாக்ஷி யேஷு தவ வீக்ஷண பாரதந்த்ரீ ||27||

அம்மையே காமாட்சீ! எவரிடம் உன்னுடைய கடைக்கண் விழுகிறதோ, அவர்களுக்கு கலைமகள் தோழியாகிறாள்; திருமகள் அவர்களது கண்ணசைவிக்கு ஒப்ப நடக்கிறாள்; ஈரேழுலகும் அவர்கள் இருப்பிடமாகும்; மூவுலகினரின் கண்களுக்கும் அவர்களுடைய வடிவோ அமுதமாகும்.

எவர்க்குன் கடைக்கண் இயல்வதோ காமாட்சீ ஈன்றவளே
அவர்க்குக் கலைமகள் அன்பாய தோழி! அருள்திருவோ
அவர்க்கண் ணசைவை அணைந்து நடப்பாள்; அனத்துலகும்

அவரிடம்; மூவம்போர் அக்க அமுதாம் அவர்வடிவே


இயலுவது - நேருதல், கூடியதாதல்; மூவம்போர் - மூவுலகோர் (அம்பு - உலகு); அக்கம் - கண்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...