त्रैयम्बकं त्रिपुरसुन्दरि हर्म्यभूमि
रङ्गं विहारसरसी करुणाप्रवाहः ।
दासाश्च वासवमुखाः परिपालनीयं
कामाक्षि विश्वमपि वीक्षणभूभृतस्ते ॥26॥
த்ரையம்பகம் த்ரிபுரஸுந்தரி ஹர்ம்யபூமி
ரங்கம் விஹாரஸரஸீ கருணாப்ரவாஹ: |
தாஸாஶ்ச வாஸவமுகா: பரிபாலனீயம்
காமாக்ஷி விஶ்வமபி வீக்ஷண பூப்ருதஸ்தே ||26||
திரிபுரஸுந்தரியே! காமாக்ஷீ! உன் பார்வையாம்
மன்னனுக்கு பரமசிவனுடைய மேனி அரண்மனையாகும்; உன் கருணை வெள்ளம் விளையாடும் குளமாகும்;
இந்திரன் உள்ளிட்ட தேவர்களனைவரும் பணி செய்பவர்கள்; உலகம் முழுவதும் உன் ஆளுகைக்கு
உட்பட்ட தேசமாகும்.
திரிபுர சுந்தரி! தேவியே உந்தன் திருட்டியென்னும்
அரசருக் கண்ணல் அரன்மே னியதே அரண்மனையாம்;
கருணைப் பெருக்கு களிக்கும் குளமாம்; கடவுளரும்
கரியரும் நீட்டாட்கள்; காமாட்சீ! உன்னாட்சி காணுலகே
திருட்டி - பார்வை; கடவுளர் - தேவர்கள்;
கரியர் - இந்திரன்; நீட்டாட்கள் - பணியாட்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam